விபத்தில் பெண் ஒருவர் பலி

விபத்தில் பெண் ஒருவர் பலி

பெலியத்த பகுதியில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

46 வயதுடைய பெண் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியின் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

சாரதி சிறுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.