களுத்துறையை ஆட்டிப்படைத்த கொள்ளையர்கள் சிக்கினர்
தங்க நகை கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 11 பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர்கள் இருவரை களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (15) களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமங்கல மாவத்தை ரயில் கடவைக்கு அருகில் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி 10 இலட்சம் ரூபா பெறுமதியான 5 தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 11 பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு பயாகலை பொலிஸில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 32 வயதுடைய உனவட்டுன மற்றும் களுத்துறை வடக்கு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பயாகல, மொறொந்துடுவ, அகலவத்தை, பதுரலிய மற்றும் மித்தெனிய பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட தங்க நகைக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 31 மில்லி கிராம் 190 கிராம் எடையுள்ள தங்கப் பொருட்களும் மோட்டார் சைக்கிளும் சந்தேகநபர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.