
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 138 ஓட்டங்கள்
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.
போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடி வரும் நியூசிலாந்து அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 435 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் ஆட்டமிழக்காது 153 ஓட்டங்களையும், ஹெரி புரூக் 186 ஓட்டங்களையும் பெற்றனர்.