பணத்தை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள்

பணத்தை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள்

அத்தியாவசிய ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிதி ஒழுங்குமுறை தீர்மானங்களின் அடிப்படையில் அபிவிருத்திப் பணிகளுக்கு பணம் விடுவிக்கப்படவில்லை என்றாலும், அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து வருவாய் ஈட்டும் பணிகளுக்குத் தேவையான பணத்தை விடுவிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கந்தான பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.