IPL 2023 : அதிரடியாக ஆடிய சென்னை.. இமாலய இலக்கை துரத்துமா லக்னோ?

IPL 2023 : அதிரடியாக ஆடிய சென்னை.. இமாலய இலக்கை துரத்துமா லக்னோ?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்களை எடுத்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் டாஸில் வெற்றி பெற்ற லக்னோ அணி பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணியின் பேட்ஸ்மேன்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஆகியோர் களத்தில் இறங்கினர். கடந்த போட்டியை விட இந்த மேட்ச்சில் சென்னை அணி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வேயின் சிறப்பான பார்ட்னர்ஷிப்பால் 7 ஓவரில் அணி 86 ரன்களை எடுத்திருந்தது.

31 பந்துகளை எதிர்கொண்ட கெய்கவாட் 4 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன் 57 ரன்களை எடுத்தார். கான்வே 29 பந்தில் 47 ரன்களும், அடுத்து வந்த ஷிவம் துபே 16 பந்தில் 27 ரன்னும் எடுத்தனர். ரவிந்திர ஜடேஜா 3 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தான் எதிர்கொண்ட முதல் 2 பந்தில் சிக்சர் அடித்த தோனி 3 ஆவது பந்தில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 217 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி விளையாடி வருகிறது.