IPL 2023 : டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சை தேர்வு செய்தது குஜராத் டைட்டன்ஸ்

IPL 2023 : டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சை தேர்வு செய்தது குஜராத் டைட்டன்ஸ்

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சை முதலில் தேர்வு செய்துள்ளது. முதல் போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய நிலையில் குஜராத் அணி தனது 2 ஆவது போட்டியில் டெல்லி அணியை தற்போது எதிர்கொள்கிறது.

இன்றைய போட்டியில் விளையாடும் டெல்லி அணி வீரர்கள்- ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர்(கேப்டன்), மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், சர்ஃபராஸ் கான்(விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அமன் ஹக்கிம் கான், அன்ரிக் நார்ட்ஜே, முகேஷ் குமார்

குஜராத் அணி வீரர்கள் - விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோஷ்வா லிட்டில், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப்

டெல்லி அணி லக்னோவுக்கு எதிரான தனது முதல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்ய டெல்லி கடுமையாக போராடும். குஜராத் அணி தனது முதல் போட்டியில் வலிமை மிக்க சென்னை அணியை வீழ்த்தியுள்ளது. இதனால் அந்த அணியை சமாளிப்பது என்பது, டெல்லிக்கு கடினமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.