
யாழ். தையிட்டி விகாரையில் வெசாக் தின வழிபாடுகள் தீவிரம்..!
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டி விகாரையில் வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது.
வெசாக் கூடுகள் கட்டப்பட்டு பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டு பெளத்த பாடல்கள் போடப்பட்டு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
குறித்த ஏற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
அதேவேளை தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி இறுதிநாளான வெசாக் தினத்தில் போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.