விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் - பாரிய அளவில் குறைக்கப்பட்ட உர விலை

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் - பாரிய அளவில் குறைக்கப்பட்ட உர விலை

50 கிலோகிராம் எடைகொண்ட, பொட்டாசியம் முரியேட்டு உரத்தின் (MOP)விலை 4,500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதனை விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, பொட்டாசியம் முரியேட்டு உர மூடை ஒன்றின் புதிய விலை 15, 000 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறித்த உரத்தை, அனைத்து கமநல சேவை மத்திய நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பொட்டாசியம் முரியேட்டு உரம் ஒரு மூடை 18,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதால், அந்தத் தொகையை விவசாயிகள் தாங்கிக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், புதிய விலைதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.