843 வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்...

843 வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்...

இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை இலங்கை மத்திய வங்கி தளர்த்தியுள்ளது.

சுமார் 843 வகையான பொருட்களுக்கு, அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும் போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு சமமான ‘பண வரம்பு தேவை’ கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.

843 வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம் | Sri Lanka Import Restrictions Items List

 

இந்த 843 பொருட்களில் கையடக்கத் தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்குகின்றன.

இந்த தீர்மானத்தினால் எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவடையும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.