சடுதியாக குறைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை - இன்றைய தங்க விற்பனை நிலவரம்!

சடுதியாக குறைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை - இன்றைய தங்க விற்பனை நிலவரம்!

நாட்டின் பொருளாதார நிலவரத்துக்கு அமைய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கங்களுடன் நாளாந்தம் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது தொடர் வீழ்ச்சி கண்டு வருகிறது.

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 578,361 ரூபாவாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 163,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 149,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேசமயம், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 142,900 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,410 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 18,710 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 17,860 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என கூறப்படுகிறது.