விரல் நகங்களிலும் விஜய்: வித்தியாசமான முறையில் வாழ்த்து சொன்ன ரசிகை...

விரல் நகங்களிலும் விஜய்: வித்தியாசமான முறையில் வாழ்த்து சொன்ன ரசிகை...

விஜய்யின் பிறந்தநாளுக்கு அவரது ரசிகை ஒருவர் வித்தியாசமான முறையில் வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்.

விரல் நகங்களிலும் விஜய்இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர் தான் இலங்கையைச் சேர்ந்த சங்கீதா. விஜய்- சங்கீதா தம்பதிகளுக்கு திவ்யா சாஷா மற்றும் ஜேசன் சஞ்சய் என இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.

விஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியாகி சூப்பராக ஓடி அதிக வசூலைப் பெற்றிருந்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் விஜய்யின் 68ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபுதான் இயக்க இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் நேற்றைய தினம் தனது 49ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியிருந்தார். இவரின் இந்த பிறந்த நாளுக்கு பலரும் பல வழிகளில் வாழ்த்து சொல்லியிருந்தார்கள்.

விரல் நகங்களிலும் விஜய்ஆனால் இவரின் பெண் ரசிகை ஒருவர் தளபதிக்கு வாழ்த்தும் செய்தியை வித்தியாசமாக வெளியிட்டிருக்கிறார்.

இந்தியாவில் புதுச்சேரியைச் சேர்ந்த நக அலங்கார அழகுகலை நிபுணரான பெண் தான் நகங்களில் விஜய்யின் ஒருவத்தையும் விஜய் நடித்த படங்களையும் வரைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.