எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள்.. ஏமாற்றத்தை கொடுத்த தனுஷ்...

எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள்.. ஏமாற்றத்தை கொடுத்த தனுஷ்...

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் "வாத்தி". இந்த படத்தை தொடர்ந்து தற்போது அவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் "கேப்டன் மில்லர்" படத்தில் நடித்து வருகிறார்.

இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வரலாற்று பாணியில் உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள்.. ஏமாற்றத்தை கொடுத்த தனுஷ் | Dhanush Fans Got Disappointment

மேலும், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தனர்.

அதை தொடர்ந்து நேற்று தனுஷ் தனது ட்விட்டரில் ஃபர்ஸ்ட் லுக் என கேப்ஷன் கொடுத்து ட்வீட் செய்தார். இதனை பார்த்த ரசிகர்கள் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.

 

எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள்.. ஏமாற்றத்தை கொடுத்த தனுஷ் | Dhanush Fans Got Disappointment

இந்நிலையில், ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து நாளை பக்ரீத் தினத்தன்று "கேப்டன் மில்லர்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டதாக தகவல் வந்துள்ளது.

எனவே, ரசிகர்கள் விரைவில் "கேப்டன் மில்லர்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எதிர்பார்க்கலாம்.