இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டு கைதான 15 தமிழக மீனவர்களையும் ஜுலை 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் நேற்று(09) அதிகாலை அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | Indian Fisherman Court Orderஇந்நிலையில், இவ்வாறு கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களும் அவர்கள் பயணித்த இரு படகுகளும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது15 மீனவர்களையும் ஜுலை 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.