இஞ்சியின் விலை சடுதியாக அதிகரிப்பு..!
இஞ்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ இஞ்சி 1100 ரூபாய் முதல் 1200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் விலை 2400 ரூபாயாக அதிகரித்துள்ளது.
நாள்தோறும் உணவில் இஞ்சியை பயன்படுத்துகின்ற வாடிக்கையாளர்கள் தற்போது இஞ்சியை கொள்வனவு செய்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த ஆண்டு இஞ்சியின் விளைச்சல் பாரிய அளவில் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே இஞ்சியின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.