நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் சாரதி பலி.

நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் சாரதி பலி.

பழுதுபார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி, மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம், நேற்று (17.07.2023) ஹொரண பொலேகொட பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரணையில் உள்ள கடை ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வந்த 61 வயதுடைய ஹொரணை, மேவனபலனை பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் சாரதி பலி | Horana Accident Death Police Investigation

விபத்தில் உயிரிழந்தவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி வீதியின் ஓரத்தில் பழுதுபார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மேலதிக பரிசோதனைக்காக உயிரிழந்தவரின் சடலம் மலசிருர ஹொரண ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அகலவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.