சிகை அலங்கரிப்பாளராக மாறிய ஆசிரியர்
பாடசாலைக்கு தலைமுடியை சீராக வெட்டாமல் வந்த மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் சிகை அலங்கரிப்பாளராக மாறி அவர்களின் தலைமுடியை வெட்டியதால் மாணவர்கள் கவலையுடன் உள்ளனர்.
இந்த சம்பவம் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பாடசாலைக்கு தலை முடியை ஒழுங்காக வெட்டாமல் மாணவர்கள் சிலர் வந்துள்ளனர்.இதன்போது பாடசாலையில் ஒழுக்கத்துக்கு பொறுப்பான ஆசிரியர்,அந்த மாணவர்களின் தலைமுடியை அலங்கோலமாக வெட்டியுள்ளார்.
இதனால் அந்த மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாது என கவலையுடன் உள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.