இரு மகள்களை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய தந்தை கைது!

இரு மகள்களை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய தந்தை கைது!

கம்பளை வௌதென்ன பிரதேசத்தில் தன்னுடைய பிள்ளைகளான 13 மற்றும் 14 வயதுகளுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய பிள்ளைகளின் தந்தையை சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த சிறுமிகளின் தாய், வெளிநாட்டுக்கு பணிப் பெண்ணாக சென்றுள்ளதாகவும் தனது தந்தையின் பாலியல் வன்புணர்வை தாங்கிக்கொள்ள முடியாமையால், தங்களுக்கு நேர்ந்ததை அவ் இரு சிறுமிகளும் வகுப்பாசிரியையிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வகுப்பாசிரியை வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே சிறுமிகளை மீட்டு தந்தையை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரு மகள்களை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய தந்தை கைது! | Father Sexual Assault On School Student Sri Lanka

சிறுமிகள் இருவரையும் வைத்திய பரிசோதனைக்குட்படுத்திய காவல்துறையினர், சந்தேக நபரான தந்தையை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.