யாழ் பல்கலைக்கழகத்தில் உணவுத் திருவிழா..!

யாழ் பல்கலைக்கழகத்தில் உணவுத் திருவிழா..!

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீடத்தில் சுற்றுலா விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கைகள் துறை இரண்டாம் வருட மாணவர்களின் தலைமையில் உணவுத் திருவிழா இன்றைய (24) தினம் இடம்பெற்றது.

இன்று (24) திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் திருநெல்வேலி பால் பண்ணைக்கு அருகில் அமைந்துள்ள முகாமைத்துவ மற்றும் வணிக பீட வளாகத்திலே இந்த உணவுத் திருவிழா இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழகத்தில் உணவுத் திருவிழா | Food Festival At Jaffna University Hospitality Mgt 

இந்த நிகழ்வினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா ஆரம்பித்து வைத்தார்.

மேலும் யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீட பீடாதிபதி பா.நிமலதாசன், சுற்றுலா விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கைகள் துறைத்தலைவரும் பேராசிரியருமான சி.சிவேசன் உள்ளிட்ட விரிவுரையாளர்கள், மாணவர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

யாழ் பல்கலைக்கழகத்தில் உணவுத் திருவிழா | Food Festival At Jaffna University Hospitality Mgt  

யாழ் பல்கலைக்கழகத்தில் உணவுத் திருவிழா | Food Festival At Jaffna University Hospitality Mgtஇந்த நிகழ்வில் தமிழ், சிங்கள, மற்றும் இஸ்லாமிய கலாசார உணவு வகைகள் மற்றும் மேலைத்தேய உணவு வகைகள், குடிபானங்கள் என பல்வேறுபட்ட உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

இந்த நிகழ்வானது இரண்டாம் ஆண்டு முதலாம் அரையாண்டில் கல்வி கற்கும் மாணவர்களின் முயற்சியாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.