யாழில் கோவில்களை உடைத்த சந்தேக நபரின் வங்கிக் கணக்கில் 3 கோடி ரூபா பணம்..

யாழில் கோவில்களை உடைத்த சந்தேக நபரின் வங்கிக் கணக்கில் 3 கோடி ரூபா பணம்..!

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நான்கு கோவில்களை உடைத்து பணம் மற்றும் தங்கப் பொருட்களை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அவரின் வங்கிக் கணக்குகளில் சுமார் மூன்று கோடி ரூபா பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மானிப்பாய் பகுதியில் உள்ள நான்கு பிரதான கோவில்களில் கொள்ளையடிப்பதற்காக இந்த கொள்ளையன் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

யாழில் கோவில்களை உடைத்த சந்தேக நபரின் வங்கிக் கணக்கில் 3 கோடி ரூபா பணம் | Jaffna Temple Robbery Today

இந்தக் கொள்ளைச் சம்பவங்களின் பின்னர் கொழும்பு திரும்பிய அவர், மீண்டும் ஆலயம் ஒன்றில் கொள்ளையடிக்க யாழ்ப்பாணம் சென்ற போது மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் கோவில்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் உள்ள காட்சிகளின் உதவியுடன் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.