தமிழர் பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்.

தமிழர் பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்.

திருகோணமலையில் உள்ள தோப்பூர் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்றைய தினம் (08-10-2023) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த சம்பவத்தில் தோப்பூர் -அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய கிலுறுதீன் அம்ஹர் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமிழர் பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் | Youth Died Due To Electric Shock In Trincomalee

குறித்த சிறுவன் வீட்டில் வைத்து மின்குமிழ் ஒன்றினை திருத்திக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியுள்ளதாகவும், சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவருகின்றது.

உயிரிழந்த சிறுவன் ஜனாஸா தற்போது தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.