
யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!
யாழ்ப்பாண பகுதியொன்றில் மிதி வண்டியிலிருந்து தவறிவிழுந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (09-10-2023) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் வெளிச்சவீட்டு வீதி பருத்தித்துறையை சேர்ந்த 52 வயதான பிலிப்பு ராஜசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மிதிவண்டியில் ஏற்றி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கடந்த 7 ஆம் திகதி கொண்டு சென்றபோது தவறி கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து குறித்த நபரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இவ்வாறான நிலையில் நேற்று (10) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த மரணம் தொடர்பான மரண விசாரணையினை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.