யாழில் பரபரப்பு சம்பவம்: சடலமாக மீட்கப்பட்ட பெண்! பொலிஸார் விடுத்த கோரிக்கை.

யாழில் பரபரப்பு சம்பவம்: சடலமாக மீட்கப்பட்ட பெண்! பொலிஸார் விடுத்த கோரிக்கை.

யாழ் ஸ்டான்லி வீதியில் உள்ள இலங்கை வங்கிக்கு அருகாமையில் உள்ள ஒழுங்கையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்றையதினம் (12-10-2023) இடம்பெற்றுள்ளது.

யாழில் பரபரப்பு சம்பவம்: சடலமாக மீட்கப்பட்ட பெண்! பொலிஸார் விடுத்த கோரிக்கை | Woman Dead Body Found In Jaffna Police Request

சடலமாக காணப்பட்ட குறித்த பெண் இன்றைய தினம் முற்பகல் 11-12 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அப்பகுதியில் இருந்துள்ளதாக முற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்று யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

யாழில் பரபரப்பு சம்பவம்: சடலமாக மீட்கப்பட்ட பெண்! பொலிஸார் விடுத்த கோரிக்கை | Woman Dead Body Found In Jaffna Police Request  சடலம் அடையாளம் காண்பதற்காக யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சடலமாக மீட்கப்பட்ட பெண் சுமார் 5 அடி உயரமும் பொது நிறமான நரைத்த தலைமுடியுடன் காணப்பட்ட குறித்த சடலம் நீல நிற மேல் சட்டை மண்ணிற சேலை அணிந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.