உலகக் கிண்ண தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம்: முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..!

உலகக் கிண்ண தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம்: முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..!

தற்போது இந்தியாவில் நடைபெற்று கொண்டு இருக்கும் ஒரு நாள் உலகக்கிண்ண போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.

அதாவது இதுவரை இடம்பெற்ற 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளை பெற்றுள்ளது.

இந்த நிலையில், மற்றைய அணிகள் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற போதிலும் நிகர ஓட்ட விகிதம் (NRR) வித்தியாசத்தால் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, நியூசிலாந்து அணியம் கலந்து கொண்ட 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது.

உலகக் கிண்ண தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம்: முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..! | Odi Points Table World Cup Today Match Kohli Rankiஅதேபோல், இந்திய அணியும் கலந்து கொண்ட 02 போட்டிகளிலும் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் பிரகாரம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இந்தநிலையில், தற்போது நடைபெற்று வரும் உலகக்கிண்ண போட்டியில் இலங்கை அவுஸ்திரேலியா நெதர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இது வரை எந்த வெற்றியையும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

Gallery