யாழில் 11 வயது சிறுவன் மீது கத்திக்குத்து

யாழில் 11 வயது சிறுவன் மீது கத்திக்குத்து

யாழில் 11 வயது சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ் - பலாலி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் 21 வயது இளைஞர் ஒருவர் நேற்றுமுன்தினம் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு செல்வதற்கான முன்னேற்பாடாக தனது பெரியம்மாவின் பலாலி வீட்டுக்குச் சென்று அங்கு தங்கியிருந்துள்ளார்.

யாழில் 11 வயது சிறுவன் மீது கத்திக்குத்து | Death In Jaffna

அந்தவீட்டில் கண் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் படுக்கையில் இருந்துள்ளான். இதன்போது அந்தச் சிறுவன் மீது மேற்படி இளைஞனால் கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கத்திக்குத்துக்கு இலக்கான 11 வயதுச் சிறுவன் தெல்லிப்பழை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் குறித்த இளைஞன் பலாலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.