யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்.

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தமிழகத்தின் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்டவர்களே இவ்வாறு அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர் எனக் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் இருந்து பொருளாதார நெருக்கடி காரணமாக 150,000 ரூபாய் பணம் கொடுத்து தாம் வந்ததாக விசாரணையில் தஞ்சமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம் | 7 People From Jaffna Took Refuge In Tamil Naduஅகதிகளாக தஞ்சமடைந்த 7 பேரையும் மரைன் காவல்துறையினர் மண்டபம் பகுதிக்கு அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.