யாழில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த 25 வயது தாய்க்கு நேர்ந்த துயரம்.

யாழில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த 25 வயது தாய்க்கு நேர்ந்த துயரம்.

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் குழந்தைகளை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை யாழ் போதனா வைத்திய சாலையில் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் தொண்டைமானாறு வல்வை வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய நி.விதுஷா என்ற இளம் தாயே உயிரிழந்துள்ளார்.

யாழில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த 25 வயது தாய்க்கு நேர்ந்த துயரம் | Death A Mother Who Gave Birth To Twins Jaffnaகடந்த வருடம் திருமணம் செய்த குறித்த பெண் பிரசவத்திற்காக யாழ் போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் குறித்த பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்ததாக தெரிக்கப்படுகின்றது. குழந்தைகளும் தாயும்   நல்ல உடல் நலத்துடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், தாய் திடீரென உயிரிழந்தமை சம்பவம் அப்பகுதியில்,சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.