வைரலாகும் யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய பிரசன்ன குருக்களின் திரைப்படப் பாடல்.
யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவிலில் "கட்டியம்" சொல்லி பிரசித்தி பெற்ற பிரசன்ன குருக்கள் பாடிய திரைப்பட பாடல் ஒன்று பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அத்துடன் இந்த பாடல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. தென்னிந்திய திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இப்பாடலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ஈழத்து இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற "புத்தி கெட்ட மனிதரெல்லாம்" திரைப்படத்தினை தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குனர் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் "டக் டிக் டோஸ்" எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.
வெகு விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த திரைப்படத்தின் பாடல் ஒன்றினை வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தனின் "கட்டியம்" சொல்லி பிரசித்தி பெற்ற பிரசன்ன குருக்கள் பாடியுள்ளார்.
குறித்த பாடல் அண்மையில் வெளியாகிய நிலையில், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், பிரசன்ன குருக்களின் குரலை வலத்தளவாசிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.