யாழில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த உறவினர் கைது

யாழில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த உறவினர் கைது

யாழ் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 14 வயதும் 8 மாதங்களும் நிரம்பிய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சிறுமியின் தந்தையின் அண்ணா (பெரியப்பா) கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் குறித்த சந்தேகநபர் குளிர்பானத்தில் மயக்க மருந்தினை போட்டு சிறுமிக்கு அதனை கொடுத்து சிறுமியை வன்புணர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுன்னாகம் பொலிஸார் அவரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

யாழில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த உறவினர் கைது | Uncle Arrested On Charges Of Abusing 14 Girl

இருப்பினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிசார் கூறுகின்றனர்.

சிறுமி பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த உறவினர் கைது | Uncle Arrested On Charges Of Abusing 14 Girl

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் பெற்றோர் பிள்ளைகளை தனியாக விட்டு விட்டோ அல்லது பாதுகாப்பற்ற நபர்களுடன் விட்டு விட்டோ வெளியே செல்ல வேண்டாம் என்றும், வெளியே செல்லும் போது அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புரொடவுஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.