மன்னாரை சேர்ந்த நபர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!

மன்னாரை சேர்ந்த நபர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் உயிலங்குளம் மன்னாரைச் சேர்ந்த 67 வயதான யாக்கோப்பு சூசைதாசன்  என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னாரை சேர்ந்த நபர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு! | Mannar Person Died At The Jaffna Teaching Hospitalசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பால் மற்றும் அரிசி வியாபாரம் செய்து வரும் குறித்த வயோதிபர் கடந்த 15 ஆம் திகதி நானாட்டானில் இருந்து மன்னார் நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவரை மோதி தள்ளியுள்ளது.

மன்னாரை சேர்ந்த நபர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு! | Mannar Person Died At The Jaffna Teaching Hospitalஇந்த விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளான நபர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று புதன்கிழமை (17-01-2024) காலை 5:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம்மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.