யாழில் தொடரும் துயரம்; இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

யாழில் தொடரும் துயரம்; இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

யாழில் டெங்கு நோயாயால்  பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய  இரு பிள்ளைகளின் தந்தை உயிர்ழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை இன்றைய தினம் (19)   யாழ் நகரப்பகுதியில் வங்கியொற்றுக்கு சென்ற சமயம் மயங்கமடைந்து விழ்ந்து உயிரிழந்துள்ளார்

யாழில் தொடரும் துயரம்; இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு | The Father Of Two Died Of Dengue Fever Jaffnaயாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் தனது தேவைக்காக வங்குயொன்றுக்கு பணம் பெற சென்றபோது இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அரியாலை இராசதோட்டம் பகுதியைச் சேர்ந்த செல்வராசா சிந்துஜன் வயது 31என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளார்

சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை  யாழ்மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில்  அதனால்  உயிரிழப்புக்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.