ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! வெளியான தகவல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! வெளியான தகவல்

2024/2025 நிதியாண்டில் விமான தாமதங்கள் காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 4.16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது முந்தைய ஆண்டை விட 44 சதவீதம் அதிகம் என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் விமான தாமதங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை கூறுகின்றது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! வெளியான தகவல் | Srilankan Airlines Loss Of Dollar Announcementஇந்த நிதியாண்டில் திட்டமிடப்பட்ட 46,518 விமானங்களில், 23,055 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. 29 சதவீத விமானங்கள் தாமதமாகிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

தொழில்நுட்ப பிழைகள், பணியாளர்களின் சோர்வு, மோசமான பராமரிப்பு திட்டங்கள் ஆகியவை விமான தாமதங்களுக்கு முக்கிய காரணங்களாகும்.

உலகளாவிய விநியோகச்சங்கிலி சிக்கல்கள், பறவை மோதல்கள் போன்றவையும் இதற்குக் காரணமாகும் என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், விமானக்கட்டுப்பாடுகள் விமான இடையூறுகளையும் ஏற்படுத்தியதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.