 
                            அதிகாரப்பூர்வமாக அமர்க்களமாக வந்தது விஜய்யின் கட்சியின் பெயர்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.
தமிழை தாண்டி இந்திய சினிமாவே அவரை கொண்டாடுகிறது என்று தான் கூற வேண்டும். ஆந்திரா, கேரளா, கர்நாடகா, வட மாநிலம் என ஆள் ஏரியாவிலும் அண்ணன் கில்லி தான்.
இவரது படங்கள் ரிலீஸ் ஆனால் எல்லா இடங்களிலும் எப்படிபட்ட வரவேற்பு பெறும் என்பது நமக்கே தெரிந்த விஷயம் தான்.
இந்த நிலையில் தான் கடந்த சில வருடங்களாக விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நிறைய செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
தற்போது இன்று பிப்ரவரி 2, அதிரடியாக அமர்க்களமான ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது விஜய்யின் கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்துள்ளனர்.
அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


 
                     
                                            