வலுவான நிலையில் ஆப்கானிஸ்தான் - நான்காம் நாள் ஆட்டம் இன்று!

வலுவான நிலையில் ஆப்கானிஸ்தான் - நான்காம் நாள் ஆட்டம் இன்று!

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
 

கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்தபோட்டியில், நேற்றைய ஆட்டநேர முடிவில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும், ஆப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களை பெற்று, 42 ஓட்டங்கள் பின்தங்கியிருந்தது.
 

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் இப்ராஹிம் சத்ரான் 101 ஓட்டங்களுடனும், ரஹ்மத் ஷா 46 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
 

முன்னதாக, தமது முதலாவது இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களை பெற்றது.
 

இதனை தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 439 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.