ஐ.பி.எல் தொடரில் மீண்டும் வரலாற்றை மாற்றி அமைத்த சன்ரைசர்ஸ்!

ஐ.பி.எல் தொடரில் மீண்டும் வரலாற்றை மாற்றி அமைத்த சன்ரைசர்ஸ்!

ஐபிஎல் வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்து சன்ரைசர்ஸ் அணி மீண்டும் ஒருமுறை சாதனை படைத்துள்ளது.

ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ஓட்டங்களை பெற்ற நிலையில், சன்ரைசர்ஸ் அணி இந்த சாதனையை படைத்துள்ளது.

இதேவேளை, இந்த வருட ஐபிஎல் தொடரில் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னைய சாதனையான 263 ஓட்டங்களை சன்ரைசர்ஸ் அணி முறியடித்திருந்தது.

ஐ.பி.எல் தொடரில் மீண்டும் வரலாற்றை மாற்றி அமைத்த சன்ரைசர்ஸ் | Srh Vs Rcb Live Scoreமும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் 277 ஓட்டங்களை பெற்று குறித்த சாதனை முறியடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மீண்டுமொரு முறை சன்ரைசர்ஸ் அணி இந்த வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது.  

ஐ.பி.எல் தொடரில் மீண்டும் வரலாற்றை மாற்றி அமைத்த சன்ரைசர்ஸ் | Srh Vs Rcb Live Scoreசன்ரைசர்ஸ் அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டிராவிஸ் ஹெட் 41 பந்துகளில் 101 ஓட்டங்களையும் க்ளாஸன் 31 பந்துகளில் 67 ஓட்டங்களையும் பெற்றனர்.

மேலும், இறுதியாக களமிறங்கிய அப்துல் சமத் 10 பந்துகளில் 37 ஓட்டங்களை பெற்றார். 

இந்த ஆண்டு ஐபிஎல் (IPL) தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியானது பேட் கம்மின்ஸ் (Pat Cummins) தலைமையிலான பலம் வாய்ந்த சன்ரைஸர்ஸ் (SRH) அணியினை எதிர்கொள்கின்றது.

குறித்த போட்டியானது, பெங்களூருவின் சின்னசுவாமி மைதானத்தில் இன்று (15.04.2024) நடைபெற்று வருகின்றது.

நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடி வரும் சன்ரைஸர்ஸ், தற்போது வரை 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 76 ஓட்டங்களை பெற்று பலம்வாய்ந்த ஒரு நிலையில் உள்ளது.

ஐ.பி.எல் தொடரில் மீண்டும் வரலாற்றை மாற்றி அமைத்த சன்ரைசர்ஸ் | Srh Vs Rcb Live Scoreரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த வருட ஐபிஎல் தொடரின் அரையிறுதிகளில் தனது இருப்பை தக்க வைத்துக்கொள்ள இந்த போட்டியின் வெற்றி மிகவும் முக்கியமானதாக உள்ளது.

ஐ.பி.எல் தொடரில் மீண்டும் வரலாற்றை மாற்றி அமைத்த சன்ரைசர்ஸ் | Srh Vs Rcb Live Scoreஅதேவேளை, புள்ளிபட்டியலில் சன்ரைஸர்ஸ் அணி 4ஆவது இடத்திலும் பெங்களூரு அணி 10ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.