யாழ் போதனாவில் அரங்கேறிய நாடகம்: சத்திர சிகிச்கைக்கு பணம் கோரியதாக குற்றச்சாட்டு!!

யாழ் போதனாவில் அரங்கேறிய நாடகம்: சத்திர சிகிச்கைக்கு பணம் கோரியதாக குற்றச்சாட்டு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) இதய சத்திர சிகிச்சையின் போது ஏற்பட்ட தவறால் பெண் ஒருவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனை நேற்று(18) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே உயிரிழந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் சகோதரர் மேலும் தெரிவிக்கையில், குறித்த பெண் வைத்தியர்களின் தவறினாலேயே உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சி பல்லவராஜன் கட்டு பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சுரேஷ்குமார் பாக்கிய செல்வி எனும் எனது சகோதரிக்கு கடந்த 08 ஆம் திகதி போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital ) சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

யாழ் போதனாவில் அரங்கேறிய நாடகம்: சத்திர சிகிச்கைக்கு பணம் கோரியதாக குற்றச்சாட்டு | Medical Malpractice Kills Woman In Yaliதவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் மற்றும் அரச மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.