ஐரோப்பிய நாடொன்றில் தீயில் சிக்கி உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன்; துயரத்தில் குடும்பம்

ஐரோப்பிய நாடொன்றில் தீயில் சிக்கி உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன்; துயரத்தில் குடும்பம்

 ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில் ஏறபட்ட தீ விபத்தில் 23 வயதான  இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இடம்பெற்ற சம்பவத்தில் புத்தளத்தை சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஐரோப்பிய நாடொன்றில் தீயில் சிக்கி உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன்; துயரத்தில் குடும்பம்! | Sri Lankan Tamil Youth Dies In Belgium Fire

ஆண்ட்வெர்ப் பகுதியில் டிசம்பர் 5, ஆம் திகதி இலங்கை தமிழ் இளைஞன் வசித்து வந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

அவருடன் வசித்த மற்றவர்கள் சிறிய காயங்களுடன் தப்பித்த நிலையில் கடுமையான புகையை சுவாசித்ததால் இலங்கை தமிழ் இளைஞன் குளியலறையில் மயக்கமடைந்தார்.

வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நான்கு நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 9, 2024 அன்று அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இந்நிலையில் தீயில் சிக்கி இலங்கை இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.