அதிகரித்த இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம்

அதிகரித்த இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம்

2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் (Sri Lanka) பொருளாதாரம் 5.5 வீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்கள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

நிலையான விலையில் (2015) 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,987,544 மில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 3,151,941 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதன்படி, 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 5.5 சதவீத நேர்மறையான வளர்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகரித்த இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் | Sri Lanka S Economic Growth Rate Increased

சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், தற்போதைய விலைகள் மற்றும் நிலையான விலையில் (2015) உற்பத்தி அணுகுமுறையின் கீழ் 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான (ஜூலை 01 முதல் செப்டம்பர் 30 வரை) மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பிற பொருளாதாரக் குறிகாட்டிகளை கணித்து வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், விவசாய பொருளாதார நடவடிக்கைகள், தொழில்துறை பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சேவை பொருளாதார நடவடிக்கைகள் முறையே 3.0 சதவீதம், 10.8 சதவீதம் மற்றும் 2.6 சதவீதம் நேர்விகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.