குளவி கொட்டுக்கு இலக்கான சிறுவன் பலி

குளவி கொட்டுக்கு இலக்கான சிறுவன் பலி

பதுளை புஸ்ஸலா - வாடித்துறை பகுதியில் நேற்றைய தினம் குளவி கொட்டுக்கு இலக்கான சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

அத்துடன் குளவி கொட்டுக்கு இலக்கான மேலும் 6 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான சிறுவன் பலி | Boy Dies After Being Stung By A Waspகுளவி கொட்டுக்கு இலக்கான சிறுவன் வகுஹப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

அதேநேரம் குளவி கொட்டுக்கு இலக்கான ஏனையோரில் உயிரிழந்த சிறுவனின் தாய், தந்தை மற்றும் சகோதரன் ஆகியோரும் அடங்குவதாக தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.