கொழும்பில் பதற்றம்! குடு கண்ணாவின் கும்பலில் ஒருவர் பலி

கொழும்பில் பதற்றம்! குடு கண்ணாவின் கும்பலில் ஒருவர் பலி

கொட்டாஞ்சேனையில் உள்ள பெனடிக்ட் மாவத்தையில் இன்று(10.02.2025) மாலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள இரண்டு குற்றக் கும்பல்களுக்கிடையில் நிலவி வந்த தகராறின் காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் T - 56 ரக துப்பாக்கியைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 43 வயதுடைய நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் பதற்றம்! குடு கண்ணாவின் கும்பலில் ஒருவர் பலி | Gun Shoot Kotahena Todayஉயிரிழந்த குறித்த நபர் குடு கண்ணா என அழைக்கப்படும் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்பவரின் சீடர் ஆவார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.