உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20-ம் திகதி கொண்டாடப்பட்ட நிலையில்,   இலங்கை 133 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஐ.நா.வின் வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 128 ஆவது இடத்தில் இருந்த இலங்கை இந்த ஆண்டு வெளியான பட்டியலில் 133 ஆவது இடத்தை பெற்று பின்னடைந்துள்ளது.

அந்த அறிக்கையின் படி மேலும் தெரியவருவதாவது, 

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் | Srilanka Earne Place List Happiest Countries World

வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகள் அடிப்படையில் 147 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்தப் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து எட்டாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக உள்ளது. டென்மார்க் 2ஆம் இடத்திலும் ஐஸ்லாந்து 3ஆம் இடத்திலும்  ஸ்வீடன் 4ஆம் இடத்திலும் நெதர்லாந்து 5 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.

முதல் 10 இடத்தில் இஸ்ரேல் (8), இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு 126-வது இடத்தில் இருந்த இந்தியா இந்தப் பட்டியலில் 118-வது இடம் பிடித்துள்ளது.

மகிழ்ச்சியான 20 நாடுகளில் உலகின் பெரிய நாடான அமெரிக்கா இல்லை. அமெரிக்காவிற்கு 24ஆவது இடமும் இங்கிலாந்து 23 ஆவதும் மற்றும் பிரான்ஸ் முறையே 33-ஆவது இடங்னளை பெற்றுள்ளது.

இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.