கோர விபத்துக்குள்ளான பேருந்து - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

கோர விபத்துக்குள்ளான பேருந்து - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

ரம்பொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 8 ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் 05 ஆண்களும் 03 பெண்களும் உயிரிழந்துள்ளதாக கொத்மலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 04 பேர் உயிரிழந்துள்ளளர்.

குறித்த கோர விபத்து இன்று (11.05.2025) நுவரெலியா (Nuwara Eliya) - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரடிஎல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.   

இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் அவசரமாக வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கோர விபத்துக்குள்ளான பேருந்து - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை | Nuwara Eliya Bus Accident 3 Dead 35 Injured

கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கோர விபத்து குறித்து காவல்துறை விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.