செட்டிகுளத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் மரணம்
வவுனியா, செட்டிகுளம் கன்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று(19) இரவு அவரின் வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்ற பொழுது வீதிக்கரையில் நின்ற காட்டு யானை அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் கன்னாட்டி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பா.சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பறையனாலங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026