நுவரெலியா செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

நுவரெலியா செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

நுவரெலியா நகரை நோக்கிச் செல்லும் பல வீதிகளில் நிலவும் அடர்ந்த பனியினால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் அறிவித்துள்ளது.

அதன்படி, அட்டன் - நுவரெலியா பிரதான வீதி, நானுஓயா - நுவரெலியா, பதுளை - நுவரெலியா பிரதான வீதியில் நுவரெலியாவிலிருந்து ஹக்கல வரையிலும், நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் பம்பரகெல்ல வரையிலும் கடும் பனிமூட்டத்தால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

நுவரெலியா செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை! | Heavy Fog In Nuwara Eliya

அடர்ந்த மூடுபனி நிலவுவதால், இந்த வீதிகளை பயன்படுத்தும் போது வாகன சாரதிகள் தங்கள் வாகனங்களின் பிரதான முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து மெதுவாக வாகனத்தை செலுத்தி செல்லுமாறு நுவரெலியா பொலிஸ் அறிவித்துள்ளது.