பால் குடிக்க மறுத்த பச்சிளம் சிசு ; தாயின் கொடூரத்தனத்தால் பரிதாபமாக பலியான சிசு

பால் குடிக்க மறுத்த பச்சிளம் சிசு ; தாயின் கொடூரத்தனத்தால் பரிதாபமாக பலியான சிசு

கர்நாடகாவில் பால் குடிக்க மறுத்த பச்சிளம் குழந்தையை வெந்நீரில் போட்டு கொலை செய்யத தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் அருகில் உள்ள நலமங்களா என்ற பகுதியை சார்ந்த பெண் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிறந்து 38 நாட்களே ஆனா தனது ஆண் குழந்தையை கொதிக்கும் வெந்நீரில் போட்டு கொலை செய்துள்ளார்.

பால் குடிக்க மறுத்த பச்சிளம் சிசு ; தாயின் கொடூரத்தனத்தால் பரிதாபமாக பலியான சிசு | Mother Scalds Baby In Hot Water For Refusing Milk

குறித்த பெண்ணிற்கு  குறை பிரசவதில் குழந்தை பிறந்த நிலையில் அவர் சில நாட்களாக தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது.

குறித்த பெண்ணின் கணவர் மதுக்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக சொல்லப்படும் நிலையில்,  விஸ்வேஷ்புராவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

சம்பவத்தன்று இரவு  குழந்தை அழத் தொடங்கியுள்ளது. பால்குடுதலும் குடிக்காமல் அழுத்த குழந்தையை ஒரு பாத்திரத்தில் வெந்நீரை காயவைத்து அதில் துக்கி வைத்துள்ளார்.இதில் தீக்காயம் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரசவத்துக்கு பிறகான மனம் அழுதால் குறித்த பெண் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், அதனால் அவர் இப்படி செய்து இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

இந்நிலையில், குறித்த பெண் செய்தது கொடூர செயல் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.