தமிழர் பகுதியில் திடீர் சுகாதார சோதனை ; 15 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தமிழர் பகுதியில் திடீர் சுகாதார சோதனை ; 15 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

திருகோணமலை நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 33 வியாபார நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளின் வழிநடத்தலில் இச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தமிழர் பகுதியில் திடீர் சுகாதார சோதனை ; 15 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை | Health Check Trinco Legal Action Against 15 Shops

அதன்படி, மட்டிக்களி, மட்கோ நீதிமன்ற வீதி, தபால் கந்தோர் வீதி போன்ற பிரதேசங்களில் உள்ள 33 வியாபார நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சுகாதார நடவடிக்கைகளை பேணாத 15 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.