பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் நான்கு மாணவர்கள் உயிரிழப்பு

பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் நான்கு மாணவர்கள் உயிரிழப்பு

இந்தியாவின் ராஜஸ்தானில் இன்று (25) காலை பாடசாலை கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜலாவர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பாடசாலையின் ஒற்றை மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.

பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் நான்கு மாணவர்கள் உயிரிழப்பு | Four Students Killed In School Building Collapse

விபத்து நடந்த நேரத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தவிர சுமார் 40 மாணவர்கள் உள்ளே இருந்துள்ளனர்.

அதேவேளை கட்டிடம் பாழடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுவதுடன், இது தொடர்பாக முன்னர் பல முறைப்பாடுகள் வழங்கிய நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.