2 பெண் குழந்தைகளுடன் தாய் கொடூர கொலை; மர்மநபர்களை பிடிக்க பொலிஸ் தீவிரம்

2 பெண் குழந்தைகளுடன் தாய் கொடூர கொலை; மர்மநபர்களை பிடிக்க பொலிஸ் தீவிரம்

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தின் சாமர்லகோட்டா பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், இரண்டு பெண் குழந்தைகளும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீதாராம காலனியை சேர்ந்த பிரசாத் - மாதுரி தம்பதியருக்கு, புஷ்பாகுமாரி (7), ஜெஸ்ஸி நோவா (5) என்ற இரு மகள்கள் இருந்தனர்.

பிரசாத் அருகிலுள்ள ஒரு தொழிற்சாலையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த 1ம் திகதி இரவு பணிக்கு சென்ற நிலையில், நேற்று காலை வீடு திரும்பினார்.

2 பெண் குழந்தைகளுடன் தாய் கொடூர கொலை; மர்மநபர்களை பிடிக்க பொலிஸ் தீவிரம் | Mother Brutally Murdered With 2 Girls Police

அதன்போது அவர் கண்ட காட்சி மனதை பதறவைக்கும் அளவுக்கு மனைவியும் இரு மகள்களும் வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர்.

அனைவரும் தலையில் பலத்த காயங்களுடன் இருந்தனர். மனைவியின் மார்பகங்கள் மற்றும் தொடை பகுதிகளில் பிளேடால் வெட்டப்பட்ட காயங்களும் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இத்தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மூவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

2 பெண் குழந்தைகளுடன் தாய் கொடூர கொலை; மர்மநபர்களை பிடிக்க பொலிஸ் தீவிரம் | Mother Brutally Murdered With 2 Girls Police

இந்தக் கொடூரச் செயலை மர்மநபர்கள் மேற்கொண்டிருக்கக்கூடும் என்று பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வழக்குப் பதிவு செய்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், குற்றவாளிகளைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.