10ம் வகுப்பு படித்து விட்டு 30 ஆண்டுகளாக மருத்துவம் ; சிக்கிய வைத்தியர்

10ம் வகுப்பு படித்து விட்டு 30 ஆண்டுகளாக மருத்துவம் ; சிக்கிய வைத்தியர்

பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த 68 வயதுடைய நபர் ஒருவர்  அப்பகுதியில் கிளினிக் வைத்து கடந்த 30 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இவர் போலி வைத்தியர் என வந்த இரகசிய தகவலின் பேரில்  கிளினிக்கில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு படித்து விட்டு 30 ஆண்டுகளாக மருத்துவம் ; சிக்கிய வைத்தியர் | Doctor Caught Studied Only Up To 10Th Grade

இதில் அன்பழகன் 10ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக பெரம்பலூர் பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது.

 பொலிஸார் போலி வைத்தியர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியதுடன் பின்னர்  நீதிபதி முன் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.