சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு

சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு

2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk / www.results.exams.gov.lk மூலம் பார்வையிடலாம் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு | G C E O L 2024 Re Evaluation Results Released

இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி தினம் இன்று (09) நள்ளிரவுடன் நிறைவடைவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.