உருளைக்கிழங்கு - வெங்காயம் ஆகியவற்றின் புதிய விலைப்பட்டியல்

உருளைக்கிழங்கு - வெங்காயம் ஆகியவற்றின் புதிய விலைப்பட்டியல்

பேலியகொடை மற்றும் கொழும்பு - புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வெலிமடை உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 190 ரூபாயிலிருந்து 220 ரூபாய் வரையிலும், நுவரெலியா உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 230 ரூபாயிலிருந்து 240 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அத்துடன், பாகிஸ்தான் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 165 ரூபாயிலிருந்து 170 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.

உருளைக்கிழங்கு - வெங்காயம் ஆகியவற்றின் புதிய விலைப்பட்டியல் | New Price List For Potatoes And Onions

உள்ளூர் சின்ன வெங்காயம் ஒரு கிலோகிராம் 220 ரூபாயிலிருந்து 280 ரூபாய் வரையிலும், இந்தியன் பெரிய வெங்காயம் 120 ரூபாயிலிருந்து 130 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதேவேளை, தம்புள்ளை பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 120 ரூபாயிலிருந்து 140 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளைப்பூடு ஒரு கிலோகிராம் 350 ரூபாய் வரையிலும், செத்தல் மிளகாய் ஒரு கிலோகிராம் 600 ரூபாயிலிருந்து 630 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.